கலப்புத் திருமணம்: பாதுகாப்பு கோரி உயர்நீதிமன்றத்தில் மனு

சென்னை: திருநெல்வேலியில் கலப்பு திருமணம் செய்த தம்பதி பாதுகாப்பு கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். பெருமாள்புரத்தை சேர்ந்த உதயதாட்சாயினியும், பாளையங்கோட்டை சேர்ந்த மதன்குமாரும் அண்மையில் கலப்பு திருமணம் செய்தனர். கலப்பு திருமணத்திறகு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்ததால் பாதுகாப்பு கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். நானும் எனது கணவரும் எந்தவித அச்சுறுத்தல் இன்றி அமைதியாக வாழ காவல்துறை உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

The post கலப்புத் திருமணம்: பாதுகாப்பு கோரி உயர்நீதிமன்றத்தில் மனு appeared first on Dinakaran.

Related Stories: