×

₹3.64 லட்சம் ரொக்கம் பறிமுதல்

விருத்தாசலம், ஜூன் 19: பெண்ணாடம் பகுதிகளில் புகையிலை பொருட்கள் அதிக அளவில் விற்பனை செய்து வருவதாக எஸ்பி ராஜாராமுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பெண்ணாடம் இன்ஸ்பெக்டர் குணபாலன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பெ. பொன்னேரி பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் வேகமாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். காரில் வந்தவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பாபுராஜ் மகன் கிருஷ்ணா, கர்நாடகா மாநிலம் பெங்களூருவை சேர்ந்த அமர்பிரித்சிங் என்பதும் காரில் பெண்ணாடம் பகுதியில் விற்பனைக்காக மூட்டை மூட்டையாக புகையிலை பாக்கெட்டுகள் மற்றும் போதை பாக்குகள் எடுத்து வந்ததும் தெரிய வந்தது.

மேலும் நடத்திய விசாரணையில், பெண்ணாடம் வாள் பட்டறையில் உள்ள மோகன் என்பவருக்கு சொந்தமான மளிகை கடைக்கு கொண்டு சென்றதும் தெரியவந்தது. இதை தொடர்ந்து மோகனின் மளிகை கடை மற்றும் அவரது குடோனில் சென்று சோதனை நடத்திய போது குடோனில் இருந்த 4 மூட்டை புகையிலை பாக்கெட்டுகள், 6 மூட்டை போதை பாக்குகளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து ரூ.3 லட்சத்து 64 ஆயிரம் மற்றும் புகையிலை மூட்டைகளை பறிமுதல் செய்து 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் பெண்ணாடம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post ₹3.64 லட்சம் ரொக்கம் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Vriddhachalam ,SP ,Rajaram ,Pannadam ,Inspector ,Gunapalan ,Ponneri ,Dinakaran ,
× RELATED உண்டியல் காணிக்கை எண்ணும் பணி