×

உண்டியல் காணிக்கை எண்ணும் பணி

விருத்தாசலம், ஜூன் 19: விருத்தாசலத்தில் பிரசித்தி பெற்ற விருத்தகிரீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் பிரதோஷம், உற்சவம், மாசிமக திருவிழா, புத்தாண்டு நிகழ்ச்சிகள் உள்ளிட்டவைகள் வெகு விமரிசையாக நடைபெறும். ஒவ்வொரு கோயிலுக்கும் ஒவ்வொரு சிறப்புகள் இருப்பது போல் இந்த கோயிலில் உள்ள சிவனை வழிபட்டால் முக்தி கிடைக்கும் என்பது ஐதீகம். இதனால் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் தினமும் இக்கோயிலுக்கு வந்து செல்கின்றனர்.

அவ்வாறு தங்களின் வேண்டுதல்கள் நிறைவேற பக்தர்கள் அங்குள்ள உண்டியல்களில் காணிக்கையாக பணம், நகை மற்றும் வெள்ளி பொருட்கள் செலுத்தி வருகின்றனர். அதன்படி கோயிலின் உட்பிரகாரம் வெளிப்பிரகாரம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் 9 நிரந்தர உண்டியல்களும், 4 திருவிழா தற்காலிக உண்டியல்கள் மற்றும் ஒரு திருப்பணி உண்டியல் என மொத்தம் 14 உண்டியல்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நேற்று இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சந்திரன் முன்னிலையில் அனைத்து உண்டியல்களும் திறக்கப்பட்டு உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இதில், ரூ.9 லட்சத்து 62 ஆயிரத்து 807 ரொக்க பணம், 3 கிராம் தங்கம், 80 கிராம் வெள்ளி பொருட்கள் உண்டியலில் இருந்தது. கோயில் செயல் அலுவலர் மாலா, ஆய்வர் கோவிந்தசாமி மற்றும் இந்து சமய அறநிலையத்துறையினர் பலர் உடனிருந்தனர்.

The post உண்டியல் காணிக்கை எண்ணும் பணி appeared first on Dinakaran.

Tags : Vriddhachalam ,Vridhakriswarar Temple ,Pradosham ,Utsavam ,Masimag festival ,New Year ,Shiva ,
× RELATED ₹3.64 லட்சம் ரொக்கம் பறிமுதல்