×

சவுக்கு தோப்பில் தீ விபத்து

பண்ருட்டி, ஜூன் 27: பண்ருட்டி அருகே சவுக்கு தோப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் ஆயிரக்கணக்கான மரங்கள் தீயில் கருகி நாசமாயின. பண்ருட்டி அருகே திருவாமூர் காமாட்சி பேட்டையை சேர்ந்தவர் பிரகாஷ் (27). இவருக்குச் சொந்தமான விவசாய நிலங்கள் அதே பகுதியில் உள்ளன. இதில் சுமார் 2 ஏக்கர் பரப்பில் சவுக்கு பயிரிட்டிருந்தது. இந்த நிலையில் நேற்றுமுன்தினம் சவுக்கு தோப்பு திடீரென தீப்பற்றி எரிந்தது. இதில் ஆயிரக்கணக்கான மரங்கள் தீயில் கருகி சேதமடைந்தன. இது குறித்த புகாரின்பேரில், புதுப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சவுக்கு தோப்பில் தீ விபத்து appeared first on Dinakaran.

Tags : Chawku Grove ,Panruti ,Chauku Grove ,Prakash ,Tiruvamur Kamachi Pettah ,
× RELATED பண்ருட்டி தர்காவில் 2 குழந்தைகளை விட்டுச்சென்ற தாய்..!!