×

கள்ளச்சாராயம் விற்ற 6 பேர் கைது

சங்கராபுரம், ஜூன் 26: கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர்கள் கோவிந்தன், ராஜா தலைமையிலான போலீசார் சோழம்பட்டு, சேஷசமுத்திரம், மூரார்பாளையம், வளையாம்பட்டு ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சோழம்பட்டு கிராமத்தை சேர்ந்த அலமேலு என்பவர் அவரது வீட்டின் பின்புறம் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்தார். அவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். இதேபோல், சேஷசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த தனலட்சுமி என்பவர் அவரது வீட்டின் அருகில் சாராயம் விற்ற போது மடக்கி பிடித்து கைது செய்ததுடன் அவரிடமிருந்து 110 லிட்டர் சாராயத்தையும், முனுசாமி (36) என்பவரை கைது செய்து 106 லிட்டர் சாராயத்தையும், வீட்டின் பின்புறம் சாராயம் விற்ற கண்ணன் (50) என்பவரை கைது செய்து 108 லிட்டர் சாராயத்தையும், மூரார்பாளையம் கிராமத்தில் கருத்தாப்பிள்ளை என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 110 லிட்டர் சாராயத்தையும், வளையாம்பட்டு கிராமத்தை சேர்ந்த குமார் (46) என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து 110 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.

The post கள்ளச்சாராயம் விற்ற 6 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Sankarapuram ,Kallakurichi District ,Sankarapuram Police Station Police ,Assistant Inspectors ,Govinthan ,Raja ,Cholampattu ,Seshasamuthram ,Moorarpalayam ,Prangampatu ,Alamelu ,Dinakaran ,
× RELATED தப்பி ஓடிய அதிமுக சாராய வியாபாரி 24 மணி நேரத்தில் கைது