×

வேப்பூரில் பரபரப்பு: தீயில் கருகி இளம்பெண் சாவு

வேப்பூர், ஜூன் 27: வேப்பூர் புறாக்குட்டை பகுதியை சேந்தவர் மணிகண்டன். இவரது மனைவி நீலாவதி (29). இவர்களுக்கு திருமணம் ஆகி ஆறரை வருடங்கள் கடந்த நிலையில் இவர்களுக்கு அபினவ்(5) என்ற ஆண் குழந்தையும், கனி (3) என்ற பெண் குழந்தையும் உள்ளது. இவர்கள் குடும்பத்துடன் வேப்பூரில் வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று காட்டுமைலூர் கிராமத்தில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் மணிகண்டன், நீலாவதி இருவரும் ஒன்றாக சென்று மாவட்ட ஆட்சியரிடம் இலவச வீட்டுமனை வழங்ககக்கோரி மனு அளித்துவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளனர். மதியம் மூன்று மணியளவில் நீலாவதி தனது வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். அவரை வீட்டில் காணவில்லை என அவரது கணவர் மணிகண்டன் தேடி கொண்டிருந்தார்.

அதே சமயத்தில் மாலை 5 மணியளவில் காட்டுமைலூர் கிராமத்தில் புதிதாக விற்பனைக்கு வைத்துள்ள தனியார் வீட்டுமனை நகரின் நடுவில் உள்ள கீற்று கொட்டகையில் இளம்பெண் உள்ளே சென்று தீ வைத்துக்கொண்டு எரிந்து கொண்டிருப்பதை மனை விற்பனையாளர் கதிர்வேலு பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். அருகே சென்று பார்த்தபோது முற்றிலும் உடல் கருகிய நிலையில் இளம் பெண் உயிரிழந்து கிடந்துள்ளார்.
இது குறித்து கதிர்வேலு வேப்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார் விசாரணையிலும், மணிகண்டன் தெரிவித்த தடயங்களை கொண்டும் தீயில் எரிந்து உயிரிழந்தது நீலாவதி என்பது தெரியவந்தது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த டிஎஸ்பி மோகன், உயிரிழந்த பெண்ணின் சடலத்தை பார்த்த போது முற்றிலும் தீயில் எரிந்து கருகியதால் பிரேத பரிசோதனை மேற்கொள்ள முடியாத நிலையில் இருந்தது. சம்பவ இடத்திற்கு வந்த தடயவியல் நிபுணர்கள் தீயில் கருகிய உடலை பரிசோதனைக்கு உட்படுத்தினர். இளம் பெண் நீலாவதி தீயில் இறந்த சம்பவம் குறித்து அவரது கணவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தீயிட்டுக் கொளுத்தி கொண்டாரா? அல்லது யாராவது தீ வைத்து இளம்பெண்ணை கொலை செய்தார்களா என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post வேப்பூரில் பரபரப்பு: தீயில் கருகி இளம்பெண் சாவு appeared first on Dinakaran.

Tags : Veypur ,Sendavar Manikandan ,Parakutta ,Nilavati ,Abhinav ,Kani ,
× RELATED பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு...