×

கோயிலுக்கு வந்த மூதாட்டி உயிரிழப்பு

மேல்மலையனூர், ஜூன் 26: ஆத்தூர் வட்டம் கல்லிக்கட்டு கிராமத்தை சேர்ந்த பெரியசாமி மனைவி சின்னக்கா (60). இவர் கடந்த 15ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பாத நிலையில் மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலுக்கு வந்து தஞ்சமடைந்தார். இந்நிலையில் நேற்று மர்மமான முறையில் மயானத்தின் அருகே பக்தர்கள் தங்கும் மண்டபத்தில் அவர் உயிரிழந்து கிடந்ததையடுத்து வளத்தி போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து உறவினர்களுக்கு போலீசார் தகவல் தெரிவித்து, அவர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.

The post கோயிலுக்கு வந்த மூதாட்டி உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Melmalayanur ,Periyaswamy ,Chinnakka ,Kallikattu ,Attur district ,Angalamman temple ,
× RELATED மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி