இரணியலில் போதையில் பைக் ஓட்டிய 4 பேர் மீது வழக்குப்பதிவு

திங்கள்சந்தை, ஜூன் 19: இரணியல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையிலான போலீசார் திங்கள்நகர், இரணியல் ஆகிய பகுதிகளில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மது போதையில் தனித்தனியாக பைக்குகளில் வந்த நாகராஜன்(48), பிரவீன் குமார்(37), சுபின்(36), மைக்கேல் வசந்த்(35) ஆகிய 4 பேரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் அவர்கள் மது போதையில் இருந்தது உறுதியானது. இதையடுத்து மது போதையில் பைக் ஓட்டிய 4 பேர் மீதும் இரணியல் போலீசார் தனித்தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post இரணியலில் போதையில் பைக் ஓட்டிய 4 பேர் மீது வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Related Stories: