கோவில்பட்டியில் 113வது நினைவுதினம் வாஞ்சிநாதன் படத்திற்கு மரியாதை

கோவில்பட்டி, ஜூன் 18: சுதந்திர போராட்ட வீரர் தியாகி வாஞ்சிநாதனின் 113வது நினைவுதினத்தையொட்டி கோவில்பட்டியில் அவரது படத்திற்கு மாலை அணிவித்தும், மலர்கள் தூவியும் மரியாதை ெசலுத்தப்பட்டது.  சுதந்திர போராட்ட வீரர் தியாகி வாஞ்சிநாதனின் 113வது நினைவு தினம் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி கோவில்பட்டியில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்த நினைவுதின நிகழ்ச்சிக்கு முன்னாள் அரசு வக்கீல் சந்திரசேகர் தலைமை வகித்தார். இந்திய கலாசார நட்புறவுக்கழகத்தின் மாநில செயலாளர் தமிழரசன், வாஞ்சிநாதனின் வாஞ்சிநாதனின் படத்திற்கு மாலை அணிவித்தும் மலர்கள் தூவியும் மரியாதை செலுத்தினார்.

நிகழ்ச்சியில் இந்திய கலாசார நட்புறவு கழக நிர்வாகிகள் சுபேதார் கருப்பசாமி, கல்லூரணி ராதாகிருஷ்ணன், ஆவல்நத்தம் லட்சுமணன், செண்பகம், உத்தண்டராமன், ஜீவா, மோகன், கலை இலக்கிய பெருமன்றம் ஜெயா ஜனார்த்தனன், மக்கள் நலம் அறக்கட்டளை மாரிமுத்துகுமார், பகத்சிங் ரத்ததான கழக அறக்கட்டளை காளிதாஸ், லட்சுமணன், வேல்முருகன், வேம்பு மக்கள் சக்தி இயக்கம் தேவராஜ், சுபத்ரா, வக்கீல் முத்துக்குமார், ஐஎன்டியுசி ராஜசேகரன், தர்மம் வெல்லும் அறக்கட்டளை பூலோகப்பாண்டியன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். பேராசிரியர் ராமசுப்பிரமணியன் நன்றி கூறினார்.

The post கோவில்பட்டியில் 113வது நினைவுதினம் வாஞ்சிநாதன் படத்திற்கு மரியாதை appeared first on Dinakaran.

Related Stories: