குருதி கொடையாளர் தினம் அதிக ரத்ததானம் வழங்கியவர்களுக்கு சான்றிதழ், பதக்கம்

 

தென்காசி: உலக சுகாதார நிறுவனம் ரத்த தானம் செய்வோரை சிறப்பிக்கும் விதமாக ரத்த வகைகளை கண்டுபிடித்து நோபல் பரிசு பெற்றவரான கார்ல் லாண்ட்ஸ் டெய் னெரின் பிறந்ததினமாக 2005ம் ஆண்டு முதல் ஜூன் 14ம் தேதியை உலக குருதிக் கொடையாளர் தினமாக கொண்டாடி வருகிறது. தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் குருதி மையம் சார்பாக உலக குருதி கொடையாளர் தின விழா கொண்டாடப்பட்டது.

விழாவில் சிறப்பு விருந்தினராக கலெக்டர் கமல் கிஷோர் பங்கேற்று அதிக ரத்த தானம் வழங்கிய குருதிக்கொடையாளர்களை பாராட்டி சிறப்பு சான்றிதழும், பதக்கமும் வழங்கினார். சுமார் 120க்கும் மேற்பட்ட கொடையாளர்கள் கவுரவிக்கப்பட்டனர். ரத்த வகை கண்டறியும் முகாமில் சுமார் 200 பேருக்கு ரத்த வகை கண்டறியப்பட்டது. நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக இலவச குருதி வகை கண்டறியும் முகாம் மாவட்ட தலைமை மருத்துவமனை ஆய்வகம் சார்பில் நடத்தப்பட்டது.

தென்காசி, சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையின் குருதி மையத்திற்கு சிறப்பான ஒத்துழைப்பு நல்கிய பல்வேறு அமைப்புகள், அரசு ஆரம்ப சுகாதார மையங்கள் மற்றும் பணியாளர்கள் கவுரவிக்கப்பட்டனர். இவ்விழாவில் இணை இயக்குனர், நலப்பணிகள் டாக்டர் பிரேமலதா, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ஜெஸ்லின்,

அரசு மருத்துவமனை குருதி மைய டாக்டர் பாபு, மாவட்ட துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் டாக்டர்.வி. கோவிந்தன் எம்.பி.பி.எஸ் டி.பி.எச், சங்கரன்கோவில் அரசு மருத்துவமனை ரத்த வங்கி அலுவலர் தேவி பிரபா கல்யாணி, நிலைய மருத்துவர் செல்வபாலா, மருத்துவர்கள் லதா, நிர்மல், செவிலியர் கண்காணிப்பாளர்கள், செவிலியர்கள் மற்றும் இதர பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

The post குருதி கொடையாளர் தினம் அதிக ரத்ததானம் வழங்கியவர்களுக்கு சான்றிதழ், பதக்கம் appeared first on Dinakaran.

Related Stories: