வாலாஜாபாத்தில் ஜமாபந்தி: கலெக்டர், எம்பி, எம்எல்ஏ பங்கேற்பு

வாலாஜாபாத்: வாலாஜாபாத் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி மோகன், எம்எல்ஏ சுந்தர், எம்பி ஆகியோர் பங்கேற்றார். வாலாஜாபாத் தாலுகா அலுவலகத்தில், 1433ம் பசலி ஆண்டுக்கான வருவாய் தீர்வாயம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த, ஜமாபந்தி நிகழ்ச்சி வாலாஜாபாத் வட்டத்தில் வருவாய் தீர்வாயம் 14.6.2024 முதல் 21.6.2024 நாள் வரை நடைபெறும்.

அதன்படி நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியில் தென்னேரி உள்வட்டத்தை சேர்ந்த தோனான்குளம், தேவரியம்பாக்கம், தாழையம்பட்டு, அளவூர், வாரணவாசி, ஆம்பாக்கம், கட்டவாக்கம், அத்திப்பட்டு, மஞ்சமேடு, அகரம், விளாகம், அயிமிச்சேரி, கோவளவேடு, நாவெட்டிக்குளம், குண்ணவாக்கம், தென்னேரி, மடவிளாகம், வேண்பாக்கம், பெரிய மதுரப்பாக்கம், சின்ன மதுரப்பாக்கம் கிராமத்தை சார்ந்த பொதுமக்களிடம் ஏராளமான மனுக்கள் பெறப்பட்டது.

இவ்வாறு, பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும், பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு, தேவரியம்பாக்கம் கிராமத்தை சார்ந்த 3 பயனாளிகளுக்கும், வேண்பாக்கம் கிராமத்தை சார்ந்த 1 பயனாளிக்கும் பட்டா மற்றும் பெயர் மாறுதல் சான்றிதழ்களை மாவட்ட கலெக்டர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம், உத்திரமேரூர் எம்எல்ஏ சுந்தர், வாலாஜாபாத் ஒன்றிய குழுத்தலைவர் தேவேந்திரன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) யோகஜோதி, அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post வாலாஜாபாத்தில் ஜமாபந்தி: கலெக்டர், எம்பி, எம்எல்ஏ பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: