முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கையால் ஏற்றுமதியில் தமிழ்நாடு முதலிடம்: அமைச்சர் அன்பில் மகேஷ் பெருமிதம்

ஆலந்தூர்: சென்னை ஆலந்தூர் சட்டமன்ற தொகுதி திமுக சார்பில், கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் திராவிட மாடல் அரசின் 3 ஆண்டுகள் சாதனை விளக்கம் கூட்டம் மற்றும் பெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் நங்கநல்லூர், ஸ்டேட் பேங்க் காலனியில் நடைபெற்றது. ஆலந்தூர் தெற்கு பகுதி செயலாளரும் 12வது மண்டல குழு தலைவருமான என்.சந்திரன் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் பி.குணாளன், ஒன்றிய செயலாளர்கள் ஜி.கே.ரவி, வந்தே மாதரம் படப்பை மனோகரன் முன்னிலை வகித்தனர்.

வட்ட செயலாளர் ஜெ.நடராஜன் வரவேற்றார். இந்த கூட்டத்தில், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியது; உள்நாடு உற்பத்தியில் நாம்தான் 2ம் இடத்தில் இருக்கின்றோம். இதுதான் திராவிட மாடல் ஆட்சியின் சாதனை. ஏற்றுமதி குறியீட்டில் நாம் முதலிடத்தில் வந்துவிட்டோம். தொழிலாளர்கள் முதலீடு என்று வரும்போது 14வது இடத்தில் இருந்த தமிழ்நாடு இப்போது 3வது இடத்துக்கு கொண்டுவந்தவர் முதல்வர் மு.க.ஸ்டாலின். புதுமைப்பெண் திட்டத்தில் மாதம் ரூ.1000 கொடுக்கின்றார். மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்க தமிழ்புதல்வன் திட்டத்தை கொண்டுவந்துள்ளார். புத்தொழில் புத்தாக்க கொள்கை 2023ம் ஆண்டு கொண்டுவந்து கொள்கை மூலமாக ஸ்டார்ட் அப் முன்னேற்றம் கண்டுள்ளது. இவ்வாறு பேசினார்.

இந்த கூட்டத்தில், திமுக தீர்மானக்குழு செயலாளர் மீனா வைத்திலிங்கம், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ஜெயராம் மார்த்தாண்டன், மாவட்ட இளைஞரணி செயலாளர் கோல்டு பிரகாஷ், அணிகளில் அமைப்பாளர்கள் கே.ஆர்.ஆனந்தன். கேபிள் ராஜா சுகுணா, கேபிள் ராஜா, வட்ட செயலாளர் உலகநாதன், சாலமோன், ஏசுதாஸ், கே.ஆர்.ஜெகதீஸ்வரன், மகளிரணி சச்சீஸ்வரி, பாண்டிச் செல்வி, விஜயலட்சுமி, கவுன்சிலர்கள் துர்காதேவி நடராஜன், பூங்கொடி ஜெகதீஸ்வரன், அமுதபிரியா காந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக, இந்த கூட்டத்தில் 500 ஏழைகளுக்கு இலவச வேட்டி, சேலைகளை அமைச்சர் அன்பில் மகேஷ் வழங்கினார்.

The post முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கையால் ஏற்றுமதியில் தமிழ்நாடு முதலிடம்: அமைச்சர் அன்பில் மகேஷ் பெருமிதம் appeared first on Dinakaran.

Related Stories: