பெட் பொறியியல் கல்லூரியில் பெட்டத்தான் கருத்தரங்கு

நெல்லை, ஜூன் 11: வள்ளியூர் பெட் பொறியியல் கல்லூரியில் 11C மற்றும் தொழில் முனைவோர் வளர்ச்சி சங்கம் சார்பாக ‘பெட்டத்தான் 2024’ நடைபெற்றது. மாணவர்கள் தங்களது புதுமையான அறிவியல் புதுமைகளை துறைதலைவர்களிடம் சமர்ப்பித்தனர். துறைதலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட புலமைகளை மாணவர்கள் நிபுணர் குழுவிடம் விளக்கினர். பெட் நிர்வாக அறங்காவலர் சாகுல் ஹமீது, செயலாளர் காஜா முகைதின், பொருளாளர் ஜமாலுதீன், கல்லூரி முதல்வர் முனைவர் மதன்குமார் மற்றும் துறைத்தலைவர்கள் கலந்து கொண்டுசிறப்பித்தனர். ஓவ்வொரு துறையிலும் சிறந்தசெயல் திட்டத்தை நிபுணர் குழு தேர்ந்தெடுத்தனர். துறைவாரியாக கேடயம், பணப்பரிசு மற்றும் சான்றிதழ்கள் சிறந்தசெயல் திட்டத்திற்கு வழங்கப்பட்டது. மொத்தம் 30,000 மதிப்பிலான பரிசுகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்களுக்கான ஏற்பாடுகளை 11C ஒருங்கிணைப்பாளர் முகம்மது உஸ்மான் மற்றும் தொழில் முனைவோர் சங்கம் ஒருங்கிணைப்பாளர் முகம்மது பீர் மதார்ஸா முன்னின்று செய்திருந்தனர்.

The post பெட் பொறியியல் கல்லூரியில் பெட்டத்தான் கருத்தரங்கு appeared first on Dinakaran.

Related Stories: