தொன்மையான 211 திருக்கோயில்களில் திருப்பணிகள் தொடங்க மாநில வல்லுநர் குழு ஒப்புதல்

சென்னை: தொன்மையான 211 திருக்கோயில்களில் திருப்பணிகள் தொடங்க மாநில வல்லுநர் குழு ஒப்புதல் அளித்துள்ளது.தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவுரையின்படி, சென்னை, நுங்கம்பாக்கம், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் தொன்மையான திருக்கோயில்களை பழமை மாறாமல் புதுப்பிக்கும் வகையில் திருப்பணிகளுக்கு ஒப்புதல் வழங்கிட மாதம் இருமுறை மாநில அளவிலான வல்லுநர் குழுக் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி இன்று (10.06.2024) மாநில அளவிலான வல்லுநர் குழுக் கூட்டம் இணை ஆணையர் (திருப்பணி) ஜெயராமன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம், அருள்மிகு லெட்சுமி நாராயணப்பெருமாள் திருக்கோயில், திருநாகேஸ்வரம், அருள்மிகு சந்தன மாரியம்மன் திருக்கோயில், மயிலாடுதுறை மாவட்டம், மூவலூர், அருள்மிகு மார்க்கசகாயசுவாமி திருக்கோயில், திருவெண்காடு, அருள்மிகு சுவேதாரண்யேசுவர சுவாமி திருக்கோயில், சிவகங்கை மாவட்டம், கல்லாங்குடி, அருள்மிகு காளீஸ்வர விநாயகர் திருக்கோயில், கானாடுகாத்தான், அருள்மிகு கரைமேல் அய்யனார் திருக்கோயில், இராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி, அருள்மிகு ஆதிஜெகநாத பெருமாள் திருக்கோயில், ரெகுநாதபுரம், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், ஈரோடு மாவட்டம், ஈரோடு மணிக்கூண்டு, அருள்மிகு கொங்காலம்மன் திருக்கோயில், திருமங்கலம், அருள்மிகு அம்மனீஸ்வரர் திருக்கோயில், கடலூர் மாவட்டம், திருப்பாதிரிப்புலியூர், அருள்மிகு வீரஆஞ்சநேயர் திருக்கோயில், மங்களூர், அருள்மிகு காளஅகஸ்தீவரர் திருக்கோயில், திருச்சி மாவட்டம், லால்குடி, அருள்மிகு தியாகராஜ சுவாமி திருக்கோயில், திருபைஞ்சீலி, அருள்மிகு ஞீலிவனேஸ்வரர் திருக்கோயில், சென்னை மாவட்டம், மயிலாப்பூர், அருள்மிகு அங்காளபரமேஸ்வரி திருக்கோயில், நெற்குன்றம், அருள்மிகு திருவாலீஸ்வரர் திருக்கோயில்.

கொண்டிதோப்பு, அருள்மிகு செல்வ விநாயகர், பழநி ஆண்டவர் தாது குருசாமி திருக்கோயில், கொத்தவால் பஜார், அருள்மிகு ஆதிகேசவ பெருமாள் பாஷ்யக்கார சுவாமி திருக்கோயில், சைதாப்பேட்டை, அருள்மிகு கடும்பாடி சின்னம்மன் திருக்கோயில், திருவள்ளூர் மாவட்டம், வாஞ்சிவாக்கம், அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் உள்ளிட்ட 211 திருக்கோயில்களில் திருப்பணிகள் தொடங்குவதற்கு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. மாநில அளவிலான வல்லுநர் குழு பரிந்துரைகளின் அடிப்படையில் திருக்கோயில்களில் திருப்பணிகளுக்கு திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு விரைவில் பணிகள் தொடக்கப்படும். இந்த அரசு பொறுப்பேற்றபின், கடந்த 3 ஆண்டுகளில் இன்றைய தினம் ஒப்புதல் வழங்கப்பட்ட 211 திருக்கோயில்களையும் சேர்த்து 8,848 திருக்கோயில்களுக்கு மாநில வல்லுநர் குழுவினால் திருப்பணிகள் மேற்கொள்ள ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

The post தொன்மையான 211 திருக்கோயில்களில் திருப்பணிகள் தொடங்க மாநில வல்லுநர் குழு ஒப்புதல் appeared first on Dinakaran.

Related Stories: