ஆசாரிபள்ளம் சாலையில் தீ பிடித்து எரிந்த ஸ்கூட்டர்

நாகர்கோவில், ஜூன் 9: நாகர்கோவில் – ஆசாரிபள்ளம் சாலையில் சென்று கொண்டிருந்த இரு சக்கர வாகனம் ஒன்று திடீரென்று தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நாகர்கோவில் – ஆசாரிபள்ளம் சாலையில் நேற்று மாலையில் சென்றுகொண்டிருந்த ஸ்கூட்டர் ஒன்று அனந்தன்பாலம் சந்திப்பில் சென்றபோது திடீரென்று புகை வர தொடங்கியது. இதனை தொடர்ந்து வாகனத்தை ஓட்டி சென்ற நபர் வாகனத்தை சாலையோரம் நிறுத்தினார். அப்போது வாகனம் தீ பிடித்து எரிய தொடங்கியது. தீ மளமளவென்று எரிந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள மக்கள் தண்ணீரை விட்டும், குழாயில் இருந்து தண்ணீரை பீய்ச்சி அடித்தும் எரிந்துகொண்டிருந்த தீயை அணைத்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

The post ஆசாரிபள்ளம் சாலையில் தீ பிடித்து எரிந்த ஸ்கூட்டர் appeared first on Dinakaran.

Related Stories: