×

மாநில அளவிலான தடகள போட்டி துவக்கம்

 

திருச்சி, ஜூன் 8: திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் 96-வது தமிழ்நாடு மாநில அளவிலான 19 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவினருக்கான தடகள போட்டிகள் நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று மதியம் ஹாமர் த்ரோ, போல் வால்ட், நீண்ட தொலைவு நடை போட்டி ஆகியவை நடைபெற்றது.

இன்று காலை 6 மணி முதல் போட்டிகள் அண்ணா விளையாட்டரங்கில் நடைபெறும் தொடக்க விழாவில் மாலை 4.30 மணிக்கு ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரியும் தமிழ்நாடு தடகள சங்க தலைவருமான தேவாரம், தடகள சங்க மாநிலச் செயலாளர் லதா, திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினி தொடங்கி வைக்கிறார். திருச்சி மாவட்ட தடகள சங்கத் தலைவர் மயில்வாகனன், உள்ளிட்டோர் பலர் கலந்து கொள்ள உள்ளனர். நாளை (ஜூன் 9) நிறைவு விழா நடைபெற உள்ளது.

 

The post மாநில அளவிலான தடகள போட்டி துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Trichy ,96th Tamil Nadu State Level Athletics Championships for Men and Women ,Anna Stadium ,Dinakaran ,
× RELATED விளம்பர பதாகை வைக்க அனுமதி மாவட்ட...