மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் காயம்

வடலூர், ஜூன் 7: குறிஞ்சிப்பாடி அருகே உள்ள வெங்கடாம்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த ஏலமுத்து மகன் காவியன் (13) அதே ஊரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் காவியன் நேற்று காலை தனது பாட்டி கல்யாணியுடன் வயலுக்கு சென்றுள்ளான். அங்கு வறப்பில் கிடந்த மின்சார வயரை மிதித்ததில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தான். உடனே அருகில் இருந்தவர்கள் படுகாயம் அடைந்த சிறுவனை மீட்டு குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் காயம் appeared first on Dinakaran.

Related Stories: