ரூ.4 கோடி பறிமுதல் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஓட்டல் ஊழியர்கள் மீதான வழக்கை ரத்து செய்ய ஐகோர்ட் மறுப்பு

சென்னை: ரூ.4 கோடி பறிமுதல் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஓட்டல் ஊழியர்கள் மீதான வழக்கை ரத்து செய்ய ஐகோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலின் போது தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த மார்ச் 26ம் தேதி நெல்லைக்கு ரயில் மூலம் கொண்டு சென்ற ரூ.4 கோடி ரொக்கத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். பிடிபட்ட 3 பேர், ரூ.4 கோடி பணம் நெல்லை நாடாளுமன்ற தொகுதி பாஜ வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமானது என வாக்குமூலம் அளித்தனர்.

அதைதொடர்ந்து, இந்த வழக்கு தாம்பரம் காவல் நிலையத்தில் இருந்து சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு தற்போது விசாரணை நடக்கிறது. ரூ.4 கோடி பறிமுதல் தொடர்பாக சதீஷ், எஸ்.நவீன், எஸ்.பெருமாள் ஆகியோருக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பியிருந்தது. சம்மனை எதிர்த்து 3 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு இன்று நீதிபதி ஜெயச்சந்திரன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது; உரிய நடைமுறைகளை பின்பற்றாமல், விதிகளுக்கு மாறாக சம்மன் வழங்கப்பட்டுள்ளது.

சம்மனுக்கு தடை விதிக்க வேண்டும் என மனுதாரர்கள் தரப்பு தெரிவித்துள்ளது. உரிய நடைமுறைகளை பின்பற்றி சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாகவும், தடை விதித்தால் விசாரணை பாதிக்கப்படும் என சிபிசிஐடி வாதிட்டது. தற்போதைய நிலையில் வழக்கின் விசாரணைக்கு அல்லது சம்மனுக்கு தடை விதிப்பது விசாரணையை பாதிக்கும் என தெரிவித்த, நயினார் நாகேந்திரன் ஓட்டல் ஊழியர் உள்பட 3 பேரும் சம்மனுக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டார்.

The post ரூ.4 கோடி பறிமுதல் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஓட்டல் ஊழியர்கள் மீதான வழக்கை ரத்து செய்ய ஐகோர்ட் மறுப்பு appeared first on Dinakaran.

Related Stories: