×

பகல் முழுவதும் வெயில் கொளுத்திய நிலையில் திருச்சியில் இரவில் இடியுடன் லேசான மழை

 

திருச்சி,ஜூன்.5: திருச்சி மாநகரில் கடும் வெயிலில் மக்கள் தவித்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வந்தது. இந்நிலையில் நேற்று இரவு 9 மணிக்கு தொடங்கிய மழை 1 மணி நேரம் பெய்தது. மாலையில் வாணம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு திடீரென கார் மேகங்கள் கூடி நல்ல மழை பெய்யத் தொடங்கியது.

சாலைகளிலும் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. மழையில் நனைந்தபடியே பொது மக்கள் நடந்து சென்றனர். மழை காரணமாக மாநகர பகுதிகளில் சாலைகளில் ஆங்காங்கே பள்ளங்களில் மழைநீர் தேங்கியிருந்தன. இதனால் வாகன ஓட்டிகள் மழையால் சிரமத்துக்கு இடையே வாகனங்களை ஓட்டிச் சென்றனர். மேலும் மாநகரப் பகுதிகள் முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்தது. இதேபோல, மாவட்டம் முழுவதுமே மாலை தொடங்கி இரவு வரையில் அவ்வப்போது மழை பெய்த வண்ணம் இருந்தது.

The post பகல் முழுவதும் வெயில் கொளுத்திய நிலையில் திருச்சியில் இரவில் இடியுடன் லேசான மழை appeared first on Dinakaran.

Tags : Trichy ,Dinakaran ,
× RELATED திருச்சி-திண்டுக்கல் சாலையில் போலீஸ் வாகனம்-ஆட்டோ மோதல்