கவுந்தப்பாடியை பேரூராட்சியாக மாற்ற எதிர்ப்பு

 

ஈரோடு, செப். 24: கவுந்தப்பாடியை பேரூராட்சியாக மாற்ற மக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஈரோடு கலெக்டரிடம் மனு அளித்தனர். இது குறித்து ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில், பவானி தாலுகா கவுந்தப்பாடி பஞ்சாயத்தை சேர்ந்த மக்கள் கலெக்டர் ராஜகோபால் சுன்கராவிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: கவுந்தப்பாடி பஞ்சாயத்தாக செயல்படுகிறது. முற்றிலும் தொழில் வளர்ச்சி இல்லாத கிராமம்.

இப்பகுதியில் விவசாயம், விவசாய தொழில் சார்ந்த பணிகள் செய்து வருகின்றனர். விவசாய கூலி வேலையுடன், 100 நாள் வேலை திட்டப்பணிகள் செய்கிறோம். இந்த சூழலில், கவுந்தப்பாடி பஞ்சாயத்தை டவுன் பஞ்சாயத்தாக (பேரூராட்சியாக) தரம் உயர்த்த பரிந்துரைத்து, விரைவில் உத்தரவு வர உள்ளது.

அவ்வாறு டவுன் பஞ்சாயத்தாக மாறினால் 100 நாள் வேலை திட்டப்பணிகள் நிறுத்தப்படும். எங்களுக்கு வேலை, வாழ்வாதாரம் பாதிக்கும். வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி போன்றவை உயரும். எங்களுக்கு வறுமையான சூழ்நிலை ஏற்படும். எனவே, கவுந்தப்பாடி தொடர்ந்து பஞ்சாயத்தாகவே நீட்டிக்க வேண்டும். டவுன் பஞ்சாயத்தாக தரம் உயர்த்தக் கூடாது. இவ்வாறு மனுவில் கூறி உள்ளனர்.

The post கவுந்தப்பாடியை பேரூராட்சியாக மாற்ற எதிர்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: