காளையார்கோவில் பகுதியில் பலா பழ விளைச்சல் அமோகம் நல்ல லாபமும் கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி

 

சிவகங்கை, ஜூன் 1: காளையார்கோவில் அருகே கல்லுவழி கிராமத்தில் இயற்கை முறையில் பலாப்பழம் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக இப்பகுதியை சேர்ந்த விவசாயி ஆபிரகாம் சுமார் 10 ஏக்கரில் பலாப்பழ மரங்களை நட்டு பராமரித்து வருகிறார். இதில் 200 சிங்கப்பூர் பலா மரங்களும், 800 நாட்டு பலா மரங்களும் உள்ளன. ஏப்ரல் மாதம் சீசன் துவங்கி மூன்று மாதங்களுக்கு பலா மரங்கள் பலன் தரும். இங்கு மூன்று நாட்களுக்கு ஒரு முறை ஒரு டன் வரை பலா பழங்களை பறித்து விற்பனைக்கு அனுப்பி வருகிறார். பரமக்குடி, தேவகோட்டை, சிவகங்கை, மானாமதுரை, காளையார்கோவில் சுற்றுவட்டார பகுதியில் இருந்து வரும் பெரிய மற்றும் சிறிய வியாபாரிகள் பழங்களை வாங்கி செல்கின்றனர்.

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக விளைச்சல் இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதுகுறித்து பலா விவசாயிகள் கூறுகையில், ‘சொட்டு நீர் பாசனம் மற்றும் நீர் தெளிப்பான்கள் மூலம் இயற்கை முறையில் மரங்களை பராமரித்து வருகிறோம். செம்மண் பூமியான இப்பகுதியில் விளையும் பலா பழத்தின் சுவை அதிகமாக இருக்கும். இதனால் பல்வேறு பகுதிகளில் இருந்து இங்கு வந்து பலா பழங்களை வாங்கி செல்கின்றனர். நல்ல லாபம் கிடைக்கிறது’ என்றார்.

The post காளையார்கோவில் பகுதியில் பலா பழ விளைச்சல் அமோகம் நல்ல லாபமும் கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: