இரவு 10 மணிக்குள் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம்

சென்னை: கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இரவு 10 மணிக்குள் மழைக்கு வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தென்னிந்திய பகுதிகளின் மேல் அடுக்கில் உருவான வளி மண்டல காற்று சுழற்சி தொடர்ந்து அதே இடத்தில் நீடித்து வந்ததால் கோடை மழை பெய்யத் தொடங்கியது. குறிப்பாக தென் மாவட்டங்களில் கோடை மழை இந்த முறை வெளுத்து வாங்கியது. ஆனால், வட தமிழகத்தில் லேசான மழை இடையிடையே பெய்தாலும், வெயிலின்தாக்கம் குறையவில்லை.

சராசரியாக அனேக இடங்களில் 100 டிகிரி வெயில் நிலவினாலும், சில இடங்களில் 102 டிகிரி முதல் 106 டிகிரி வரை வெயில் கொளுத்தியது. இருப்பினும் சென்னையில் கனமழைக்கு வாய்ப்பின்றி போய்விட்டது வருத்தம்தான். கத்திரி வெயில் முடிவடைந்த நிலையில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்து வெயிலின் தாக்கத்தை குறைத்ததுடன், வெப்பநிலையும் குறையத் தொடங்கியது.

இந்நிலையில் இரவு 10 மணிக்குள் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், கன்னியாகுமரி மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் இரவு 10 மணிக்குள் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

The post இரவு 10 மணிக்குள் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் appeared first on Dinakaran.

Related Stories: