நார்வே செஸ் போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீரர் கார்ல்சனை வீழ்த்திய பிரக்ஞானந்தாவுக்கு உதயநிதி வாழ்த்து..!!

சென்னை: நார்வே செஸ் போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீரர் கார்ல்சனை வீழ்த்திய பிரக்ஞானந்தாவுக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். நார்வே நாட்டில் கிளாசிக்கல் செஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் மேக்னஸ் கார்ல்சன், அமெரிக்காவின் டிங் லிரன், பாபியோ கருவானா, ஹிக்காரு நாக்கமுரா, அலிரெசா பிரவுசா மற்றும் இந்தியாவின் பிரக்ஞானந்தா ஆகியோர் ஆண்கள் பிரிவிலும், இந்தியாவின் வைஷாலி, கோனேரு ஹம்பி, ஜு வெஞ்சன், லெய் டிங்க்ஜி, பியா கிராம்லிங், அன்னா மியுசீஜக் உள்ளிட்டோர் பெண்கள் பிரிவிலும் பங்கேற்றனர்.

இதில் நார்வே செஸ் தொடரில் 3 சுற்றுகள் முடிவில் 5.5 புள்ளிகளை தமிழகத்தின் பிரக்ஞானந்தா முதலிடம் பெற்றார். மேலும், கிளாசிக்கல் செஸ் போட்டியில் மேக்னஸ் கார்ல்சனை முதல் முறையாக வீழ்த்தினார். 2வது சுற்றில் உலக சாம்பியன் டிங் லீரனிடம் தோற்ற நிலையில் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார். இந்த நிலையில், உலகின் நம்பர் ஒன் வீரர் கார்ல்சனை வீழ்த்திய பிரக்ஞானந்தாவுக்கு உதயநிதி ஸ்டாலின் தனது சமூகவலைத்தள பக்கத்தில் வாழ்த்து தெரிவித்தார்.

நார்வே செஸ் தொடரில் கலக்கியுள்ள கிராண்ட் மாஸ்டர்கள் பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு மனமார்ந்த வாழ்த்துகள். கிளாசிக்கல் செஸ்ஸில் முதல்முறையாக மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி பிரக்ஞானந்தாவும், மகளிர் நார்வே செஸ் அறிமுகப் போட்டியிலேயே ஹம்பி கோனேருவை வீழ்த்தி வைஷாலியும் புதிய சாதனை படைத்துள்ளார். அக்கா – தம்பியின் வெற்றிப் பயணம் தொடரட்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

The post நார்வே செஸ் போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீரர் கார்ல்சனை வீழ்த்திய பிரக்ஞானந்தாவுக்கு உதயநிதி வாழ்த்து..!! appeared first on Dinakaran.

Related Stories: