மறைமலைநகர் மாருதி சபா ஆலயத்தில் கொடிமரம் அமைத்து கும்பாபிஷேகம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் திருவள்ளுவர் சாலையில் மாருதி சபா ஸ்வர்ண கைலாஷ் என்கிற ஆஞ்சநேயர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் உள்ள ஆஞ்சநேயரை வழிபட்டால்,  திருமணத்தடை நீங்கி திருமணம் ஆகும். குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது அப்பகுதி ஐதீகம்.   மேலும், வேறு எந்த ஆலயத்திலும் இல்லாதபடி, இங்குள்ள முருகன் சிலைக்கு முன்பு யானை சிலை அமைந்துள்ளது சிறப்பு அம்சமாகும்.இந்நிலையில், இங்கு, புதிதாக கொடிமரம் பிரதிஷ்டை செய்து, மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. நேற்று அதிகாலை முதல் விசேஷ ஹோமங்கள் நடத்தி, கும்ப ஏற்பாட்டோடு காலை 8.15மணிக்கு புதிய கொடிமர கும்பாபிஷேகம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை மருதி சபா தலைவர்  பத்தவச்சலம், துணை தலைவர் துரைராஜ், ஜவகர்,  பொருளாளர் கலைச்செலவன், துணை செயலாளர் ஐயாசாமி ஆகியோர் செய்தனர்….

The post மறைமலைநகர் மாருதி சபா ஆலயத்தில் கொடிமரம் அமைத்து கும்பாபிஷேகம் appeared first on Dinakaran.

Related Stories: