×

டூவீலர் திருட முயன்ற 2 வாலிபர்கள் கைது

 

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த பெரியமனப்பட்டி கிராமத்தில் நேற்று முன்தினம் திருவிழா நடைபெற்றது. இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த சுகாதார நிலையத்தில் செவிலியராக பணிபுரியும் கதிர்வேல் மனைவி கனகவல்லி (31) என்பவர், தனது டூவீலரை வீட்டின் வெளியே நிறுத்திவிட்டு சென்றிருந்தார். இதனை திருச்சி பிராட்டியூரைச் சேர்ந்த ரஃபிக் மகன் ஷேக் அப்துல்லா (18), கருமண்டபம் மாந்தோப்பு பகுதியைச் சேர்ந்த சுரேஷ் மகன் சந்தோஷ் என்கிற விக்கி (18) ஆகியோர் திருட முயன்றனர். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை பிடித்து நேற்று மணப்பாறை போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post டூவீலர் திருட முயன்ற 2 வாலிபர்கள் கைது appeared first on Dinakaran.

Tags : Periyamanapatti ,Manaparai ,Trichy ,Kathirvel ,Kanakavalli ,
× RELATED மணப்பாறை அருகே மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழப்பு