×

சூதாடிய 8 பேர் கைது

 

திருச்சி, மே 30: திருச்சியில் சூதாடிய 8 பேரை போலீசார் கைது செய்தனர். திருச்சி காந்திமார்க்கெட் வடக்கு தாராநல்லூர் பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் காந்தி மார்க்கெட் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடிய அதே பகுதியை சேர்ந்த மருதமுத்து(40), குமார்(62), அமீர்ஜான்(52), இப்ராகிம்ஷா(52), ரவி(46), ராமசாமி(46), ரத்தினம்(59), பாலு(57) ஆகிய 8 பேரை கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து ரூ.3,200ஐ பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

 

The post சூதாடிய 8 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Trichy ,Gandhimarket North Tharanallur ,Gandhi Market ,Dinakaran ,
× RELATED திருச்சி-திண்டுக்கல் சாலையில் போலீஸ் வாகனம்-ஆட்டோ மோதல்