×

பூவாளூர் பேரூராட்சியில் குப்பை கிடங்கு இல்லாததால் ஏரி கரையில் கொட்டி எரிப்பு

 

லால்குடி, மே 29:திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பூவாளூர்பேரூராட்சி உள்ளது இந்த பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. தினந்தோறும் அரை டன்னுக்கு மேல் குப்பைகள் சேகரிக்கப்பட்டு லால்குடி குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு வந்தது. தற்பொழுது லால்குடி நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு குப்பைகள் மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம் பிரிக்கப்பட்டு உரம் தயாரிக்கும் இயந்திரம் கொண்டு குப்பைகளை பிரிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் பூவாளூர் பேரூராட்சியில் குப்பை கொட்டுவதற்கு போதிய இடவசதி இல்லாததால் மாதானம் ஏரி கரையில் மயானத்திற்கு இடையே செல்லும் பாதையில் குப்பைகள் கொட்டப்பட்டு அங்கேயே தீவைத்து எரிக்கும் அவல நிலை ஏற்படுகிறது. இதனால் பூவாளூரில் இருந்து அரியலூர் செல்லும் சாலை வழியாக செல்லும் பேருந்துகளில் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.

துர்நாற்றத்துடன் புகை கிளம்புவதால் நோய் தொற்று அபாயம் ஏற்படுகிறது. மேலும் தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம், குப்பைகளை பேரூராட்சி நகராட்சி நிர்வாகம் கொளுத்த கூடாது என உத்தரவு விட்டுள்ளது. இதனை மீறி பூவாளூர் பேரூராட்சியில் குப்பைகளை மாதானம் ஏரி கரையில் கொட்டி கொளுத்துவதால் அந்த வழியாக செல்லும் பேருந்துகள் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். பூவாளூர் பேரூராட்சியில் திறந்த வெளியில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க பேரூராட்சி நிர்வாகம், குப்பைகளை தரம் பிரித்து சேகரிக்க தனியாக கிடக்கு அமைக்க வேண்டும் என்பது பூவாளூர் பேரூராட்சி பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும்.

The post பூவாளூர் பேரூராட்சியில் குப்பை கிடங்கு இல்லாததால் ஏரி கரையில் கொட்டி எரிப்பு appeared first on Dinakaran.

Tags : Poovalur ,Lalgudi ,Bhuwalur ,Tiruchi district ,Dinakaran ,
× RELATED லால்குடி பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு ஆதார் பதிவு