பொன்னமராவதி சோழீஸ்வரர் கோயிலி்ல் திருஞானசம்பந்தர் குருபூஜை விழா

பொன்னமராவதி: பொன்னமராவதி சோழீஸ்வரர் கோயிலில் திருஞானசம்பந்தர் குருபூஜை விழாவில் சிவனடியார்கள், சிவபக்தர்கள் கலந்து கொண்டனர். புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஆவுடையநாயகி சமேத ராஜராஜ சோழீஸ்வரர் கோயிலில் 63 நாயன்மார்களில் ஒருவரான திருஞானசம்பந்தர் குருபூஜை விழா நடைபெற்றது.

ஆவுடையநாயகி சமேத சோழீஸ்வரர் கோயில் முற்றோதல் குழுவினர் சார்பில் நடைபெற்ற விழாவின் தொடக்கமாக ஆவுடையநாயகி சமேத சோழீஸ்வரர் மற்றும் நடராஜப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டது. அதையடுத்து ஆவுடையநாயகி சமேத சோழீஸ்வரர் கோயில் முற்றோதல் குழுவினரால் திருஞானசம்பந்தர் தேவாரப்பாடல்கள் படிக்கப்பட்டது. விழாவில் சிவனடியார்கள், சிவபக்தர்கள் மற்றும் முற்றோதல் குழுவினர் பங்கேற்றனர். விழாவையொட்டி அன்னதானம் வழங்கப்பட்டது.

 

The post பொன்னமராவதி சோழீஸ்வரர் கோயிலி்ல் திருஞானசம்பந்தர் குருபூஜை விழா appeared first on Dinakaran.

Related Stories: