மழையால் நிரம்பிய கிணறு

 

திருப்பூர், மே 26: திருப்பூர் பல்லடம் சாலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் என ஒரே வளாகத்தில் அமைந்துள்ளது. இங்கு தினந்தோறும் பல்வேறு சேவைகளுக்காக நூற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அருகே பழங்கால கிணறு ஒன்று உள்ளது.

கடந்த ஒரு வார காலமாக திருப்பூரில் பெய்த மழையின் காரணமாக கிணறு நிரம்பியுள்ளது. கிணற்றை சுற்றியும் தடுப்புகள் இல்லாததால் செடிகள் முளைத்து காணப்படுகிறது. பல்வேறு சேவைகளை வரும் பொதுமக்கள் ஆபத்தை உணராமல் கிணற்றுக்கு அருகில் செல்லும் நிலை ஏற்படுகிறது. இதனால், ஆபத்து ஏதும் ஏற்படாத வகையில் கிணற்றைச் சுற்றியும் தடுப்புகள் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

The post மழையால் நிரம்பிய கிணறு appeared first on Dinakaran.

Related Stories: