திருப்பூரில் பனியன் கம்பெனியை உடைத்து 30 தையல் இயந்திரங்கள் திருடிய பாஜ நிர்வாகி கைது

திருப்பூர்: திருப்பூர் சோளிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (35). இவர் வளையங்காடு பகுதியைச் சேர்ந்த பாஜ ஊடக பிரிவு நிர்வாகி முருகேசன் என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தை வாடகைக்கு எடுத்து கடந்த 4 வருடங்களாக பனியன் கம்பெனி நடத்தி வருகிறார். இதற்காக சுமார் 1 லட்சம் முன்பணம் கொடுத்துள்ளார். ஒரு மாத காலமாக பனியன் கம்பெனிக்கு ஆர்டர் இல்லாததால் கம்பெனியை பூட்டிவிட்டு சென்றுள்ளார். இதனால் ஒரு மாத வாடகையான 18,500 ரூபாயை முருகேசனுக்கு சுந்தரமூர்த்தி கொடுக்காமல் இருந்ததாக தெரிகிறது.

இந்நிலையில் சுந்தரமூர்த்தி கம்பெனியின் பூட்டை உடைத்து ₹5 லட்சம் மதிப்புள்ள 30 தையல் இயந்திரங்களை முருகேசன் எடுத்து விற்பனை செய்துள்ளார். இது குறித்து சுந்தரமூர்த்தி வேலம்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிந்து முருகேசனை நேற்று முன்தினம் கைது செய்தனர்.

The post திருப்பூரில் பனியன் கம்பெனியை உடைத்து 30 தையல் இயந்திரங்கள் திருடிய பாஜ நிர்வாகி கைது appeared first on Dinakaran.

Related Stories: