சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி.. கன்னியாகுமரிக்கு செல்லும் விரைவு ரயிலுக்குள் மழைநீர் ஒழுகியதால் அவதி: ரயில்வே துறைக்கு பயணிகள் கோரிக்கை!!

சென்னை: சென்னையில் இருந்து இன்று காலை கன்னியாகுமரி சென்ற அதிவிரைவு ரயிலின் ஏ.சி.பெட்டியில் மழைநீர் கசிந்தால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து நேற்று மாலை சென்னை – கன்னியாகுமரி விரைவு ரயில் புறப்பட்டது. அந்த ரயில் செல்லும் வழிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வந்த நிலையில், ரயிலின் மேற்கூரையில் இருந்து மழைநீர் கசிய தொடங்கியது. குறிப்பாக ஏ.சி. பெட்டிகளில் மின்கம்பிகள் செல்லும் பகுதிகளில் இருந்து மழைநீர் இருக்கைகளில் சிந்தியதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

இரவு நேரத்தில் படுத்து உறங்க முடியால் பலர் நின்றபடி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இது மட்டுமின்று அந்த ரயில் அசுத்தமாக இருந்ததாகவும் பயணிகள் குற்றச்சாட்டியுள்ளனர். வழக்கமாக சென்னையில் இருந்து வரும்போது நாகர்கோவில் ரயில் நிலையத்தில் ரயில் பெட்டிகள் சுத்தம் செய்யப்படும். ஆனால், கடந்த சில மாதங்களாக சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்படுவதில்லை என்று கூறும் பயணிகள் இதனை சரிசெய்ய ரயில்வே துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

The post சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி.. கன்னியாகுமரிக்கு செல்லும் விரைவு ரயிலுக்குள் மழைநீர் ஒழுகியதால் அவதி: ரயில்வே துறைக்கு பயணிகள் கோரிக்கை!! appeared first on Dinakaran.

Related Stories: