தேர்ச்சி மதிப்பெண்ணை குறைக்க கோரிக்கை

 

தேனி, மே 24: இந்தியாவில் கட்டாய கல்வி உரிமை சட்டம் அமலுக்கு வந்த பிறகு இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் டெட் எனப்படும் தகுதித் தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது. 2012ல் முதல் டெட் தேர்வு நடந்தது. அதில் 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றதால் மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்பட்டது. டெட் தேர்ச்சிக்கான மதிப்பெண் 90 என முன்பு இருந்தது. தற்போது டெட் தேர்வின் தேர்ச்சிக்கான மதிப்பெண் 82 ஆக உள்ளது. இது 150 மதிப்பெண்ணில் 55% ஆகும்.

சமீபத்தில் வெளியிடப்பட்ட டெட் தேர்வு முடிவுகளில் 15 ஆயிரம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். இது தேர்வு எழுதியவர்களில் 6% என கூறப்படுகிறது. பொதுவாக ஆசிரியர் தேர்வு வினாக்கள் கடினமாகவே உள்ளது. இதனாலேயே தேர்ச்சியும் குறைவாக உள்ளது. எனவே, தேர்ச்சி சதவிகிதத்தை 55%ல் இருந்து 50% ஆக குறைத்து 75 மதிப்பெண்கள் பெற்றவர்களை தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்க ஆசிரியர் தேர்வு வாரியமும், தமிழ்நாடு அரசும் பரீசிலிக்க வேண்டுமென தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post தேர்ச்சி மதிப்பெண்ணை குறைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: