விவசாயிகளுக்கு மானியம் கிடைக்கும் வகையில் குறுவை சாகுபடி தொகுப்பு திட்டம் செயல்படுத்த வேண்டும்: ஜி.கே.வாசன் கோரிக்கை

சென்னை: குறுவை சாகுபடி தொகுப்புத் திட்டத்தை உடனே செயல்படுத்த வேண்டும் என்று ஜி.கே வாசன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்ட அறிக்கை: குறுவை தொகுப்புத் திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துவதன் மூலம் விவசாயிகளுக்கு தேவையான விதைகள், உரங்கள், நுண்ணுாட்ட சத்துக்கள், பாசன குழாய்கள் உள்ளிட்டவை மானியமாக கிடைக்கும்.

குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் சுமார் 8 லட்சம் ஏக்கரில் பயிர் செய்யப்படுவதால் பயிர்க் காப்பீட்டுக்கு தமிழக அரசு நிதி ஒதுக்க வேண்டும். விதை நெல்லை இருப்பில் வைக்க வேண்டும். மும்முனை மின்சாரம் தடையில்லாமல் வழங்கப்பட வேண்டும். மேலும் பாசன வாய்க்காலை பராமரித்து, கடைமடை வரை நீர் செல்வதை உறுதிப்படுத்த வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post விவசாயிகளுக்கு மானியம் கிடைக்கும் வகையில் குறுவை சாகுபடி தொகுப்பு திட்டம் செயல்படுத்த வேண்டும்: ஜி.கே.வாசன் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: