புதிய பேருந்துகள் வாங்கப்பட்டு முதிர்ந்த பேருந்துகளை நீக்கம் செய்ய நடவடிக்கை: இபிஎஸ்-க்கு சிவசங்கர் பதில்


சென்னை: புதிய பேருந்துகள் வாங்கப்பட்டு முதிர்ந்த பேருந்துகளை நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று இபிஎஸ்-க்கு சிவசங்கர் பதில் அளித்துள்ளார். திமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து கழகங்களின் செயல்பாடுகள் குறித்து அறிக்கை விடுத்துள்ளார். 2011-2021 வரையிலான 10 ஆண்டு காலத்தில் அதிமுக அரசு 14,489 புதிய பேருந்துகளை வாங்கியுள்ளது. 2006-2011 வரையிலான 5 ஆண்டு காலத்தில் திமுக அரசு 15,005 புதிய பேருந்துகளை வாங்கியுள்ளது. தடை இல்லாத பேருந்து சேவையை மக்களுக்கு அளிக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அரசு பேருந்துகளை பராமரிப்பதில் தனிக்கவனம் செலுத்தப்பட்டு வருகிறது என்று அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார்.

The post புதிய பேருந்துகள் வாங்கப்பட்டு முதிர்ந்த பேருந்துகளை நீக்கம் செய்ய நடவடிக்கை: இபிஎஸ்-க்கு சிவசங்கர் பதில் appeared first on Dinakaran.

Related Stories: