பாகிஸ்தானுக்கு போய் பிச்சை எடுங்கள்: உ.பி. முதல்வர் பேச்சால் சர்ச்சை

மாலேகான்: “பாகிஸ்தானுக்கு சென்று பிச்சை எடுக்க வேண்டும்” என உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மக்களவை தேர்தலையொட்டி மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டம் மாலேகான் நகரில் பாஜ கட்சியினரின் பிரசார பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. இதில் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத் கலந்து கொண்டு பாஜ வேட்பாளருக்கு ஆதரவு திரட்டினார். அப்போது பேசிய யோகி ஆதித்ய நாத், “முகலாய மன்னன் அவுரங்கசீப் ஆட்சி காலத்தில் முஸ்லிம்கள் அல்லாத குடிமக்கள் மீது ஜிஸ்யா என்ற வரி விதிக்கப்பட்டது. தற்போது பரம்பரை வரி குறித்து காங்கிரஸ் பேசி வருகிறது. முகலாய மன்னர் அவுரங்கசீப்பின் ஆவி காங்கிரஸ் கட்சிக்குள் புகுந்து விட்டது.

140 கோடி இந்தியர்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் விதமாக அயோத்தி ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. அயோத்தி ராமர் கோயிலை இடிக்க நினைக்கும் எதிர்க்கட்சியினர் ஆட்சிக்கு வராமல் இருப்பதை அந்த ராமரே முடிவு செய்வார். 2014ல் பாஜ ஆட்சி அமைக்கும் முன் ஒவ்வொரு இந்து பண்டிகையின்போதும் நாட்டில் கலவரம் வெடிக்கும். தற்போது நிலைமை அப்படி இல்லை. பாகிஸ்தான் நாட்டுக்கு ஆதரவு தெரிவிப்பர்களுக்கு இந்தியாவில் இடமில்லை. பாகிஸ்தானை ஆதரிப்பவர்கள் அந்த நாட்டுக்கு சென்று பிச்சை எடுங்கள். பாஜ தேர்தலில் போட்டியிடுவது வெறும் அதிகாரத்துக்கு மட்டுமில்லை. வளர்ச்சி அடைந்த இந்தியாவை கட்டியெழுப்பவே பாஜ ஆட்சிக்கு வர நினைக்கிறது. மோடி மீண்டும் பிரதமராக வருவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை” என்று இவ்வாறு பேசினார்.

The post பாகிஸ்தானுக்கு போய் பிச்சை எடுங்கள்: உ.பி. முதல்வர் பேச்சால் சர்ச்சை appeared first on Dinakaran.

Related Stories: