கோட்சேவை பின்பற்றுபவர்களுக்கு காந்தியை பற்றி எதுவும் தெரியாது: பிரதமர் மோடிக்கு ராகுல் பதிலடி

பாலசோர்: காந்தி திரைப்படம் மூலமாக தான் இந்த உலகம் காந்தியை தெரிந்து கொண்டது என்று பிரதமர் மோடி விமர்சித்து இருந்தார். இந்நிலையில் ஒடிசாவின் சிமுலியாவில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பிரதமர் மோடிக்கு பதிலடி கொடுத்துள்ளார். ராகுல் பேசுகையில், ‘‘ஆர்எஸ்எஸ்சில் யார் எல்லாம் பயிற்சி பெறுகிறார்களோ அவர்கள் கோட்சேவை பின்பற்றுபவர்கள். அவர்களுக்கு காந்தியை பற்றி எதுவும் தெரியாது. இந்தியாவின் வரலாறு பற்றி அவர்களுக்கு தெரியாது. காந்தி பற்றி உலகிற்கு எதுவும் தெரியாது என்று பிரதமர் கூறுவார் என்பது எதிர்பார்த்தது தான்.” என்றார்.

* இந்தியா ஜெயிப்பது உறுதி
ராகுல்காந்தி நேற்று வெளியிட்ட வீடியோ செய்தியில், பிரசாரத்தின் கடைசி நாளான இன்று, நாட்டின் மகத்தான மக்களுக்கு வணக்கம் செலுத்தும் போது, ​​காங்கிரஸ் கட்சியினருக்கு இந்திய அரசு அமையப் போகிறது என்பதை நம்பிக்கையுடன் கூற விரும்புகிறேன். நாட்டின் அரசியல் சாசனம் மற்றும் அமைப்புகளை காப்பாற்ற சளைக்காமல் நின்ற கூட்டணியின் அனைத்து தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கடைசி நேரம் வரை மின்னணு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளைக் கண்காணிக்குமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். இந்தியா ஜெயிக்கப் போகிறது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post கோட்சேவை பின்பற்றுபவர்களுக்கு காந்தியை பற்றி எதுவும் தெரியாது: பிரதமர் மோடிக்கு ராகுல் பதிலடி appeared first on Dinakaran.

Related Stories: