மோடியின் 10 ஆண்டு ஆட்சியில் 70 கோடி பேர் வேலை இழந்து விட்டனர்: பிரியங்கா குற்றச்சாட்டு

ரேபரேலி: மோடியின் 10 ஆண்டு ஆட்சியில் 70 கோடி பேர் வேலை இழந்துவிட்டனர் என்று பிரியங்கா காந்தி குற்றம் சாட்டினார். உபி மாநிலம் அமேதி மற்றும் ரேபரேலியில் நேற்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தீவிர வாக்கு சேகரித்தார். அப்போது அவர் கூறியதாவது: ராகுல் காந்தி சத்தியத்தின் பாதையில் இறங்கியுள்ளார். அவர் எப்போதும் இந்த பாதையில் நடப்பார். மோடிக்கு மக்களுடன் எந்த தொடர்பும் இல்லை. ஆனால் அவர் தனது ஆடைகளைப் பற்றி கவலைப்படுகிறார். அவரது ஆடைகளில் சேறு ஒட்டாமல் இருக்க வேண்டும் என்று கவலைப்படுகிறார். விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய கேட்டால் நாட்டில் பணம் இல்லை என்று மோடி கூறுகிறார். ஆனால் அவரால் தொழிலதிபர்களின் கடனை தள்ளுபடி செய்ய முடிந்தது. மோடி ஆட்சியில் 70 கோடி பேர் வேலையிழந்துள்ளனர். 30 லட்சம் அரசு பணியிடங்கள் காலியாக உள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.

The post மோடியின் 10 ஆண்டு ஆட்சியில் 70 கோடி பேர் வேலை இழந்து விட்டனர்: பிரியங்கா குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: