விவசாயிகளின் உரிமைகளுக்காகவும் எளிய மக்களின் முன்னேற்றத்துக்காகவும் பாடுபட்டவர்: நாகை எம்.பி. செல்வராஜ் மறைவிற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரங்கல்..!!

சென்னை: விவசாயிகளின் உரிமைகளுக்காகவும் எளிய மக்களின் முன்னேற்றத்துக்காகவும் பாடுபட்ட நாகை எம்.பி. செல்வராஜ் மறைவிற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் எக்ஸ் தளத்தில் கூறியதாவது, நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய குழு உறுப்பினருமான அண்ணன் செல்வராஜ் மறைந்தது மிகுந்த வருத்தத்தைத் தருகிறது.

அவருடைய மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல். அண்ணன் செல்வராஜ் அவர்களை இழந்து தவிக்கும் குடும்பத்தினர், உறவினர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்கள் அனைவருக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். தன்னுடைய அரைநூற்றாண்டு கால அரசியல் வாழ்வில், விவசாயிகளின் உரிமைகளுக்காகவும் எளிய மக்களின் முன்னேற்றத்துக்காகவும் அவர் ஆற்றிய பணிகள் என்றென்றும் நிலைத்திருக்கும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

 

The post விவசாயிகளின் உரிமைகளுக்காகவும் எளிய மக்களின் முன்னேற்றத்துக்காகவும் பாடுபட்டவர்: நாகை எம்.பி. செல்வராஜ் மறைவிற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரங்கல்..!! appeared first on Dinakaran.

Related Stories: