கிருஷ்ணகிரி அருகே கோயில் விழாவில் தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நூதன நேர்த்திக்கடன்

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி அருகே சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் விழாவில், தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நூதன நேர்த்திக்கடன் செலுத்தினர். கிருஷ்ணகிரி மாவட்டம், எம்சி பள்ளி சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் 33ம் ஆண்டு விழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு, நாட்றம்பள்ளி சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிவில் இருந்து சாமுண்டீஸ்வரி அம்மன், தோட்ராய சுவாமி, வீரபத்திரசுவாமி, லக்கம்மசுவாமி, சிக்கம்மசுவாமி, காவேரியம்மா சுவாமி மனைகள், கரகம் மற்றும் மண்டு எருதோடு மேகலசின்னம்பள்ளி கிராமத்திற்கு வந்தடைதல் ஆகியவை நடைபெற்றது. மாலை 6 மணிக்கு கணபதி பூஜை, கங்கணம் கட்டுதல், அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது.

நேற்று காலை 7 மணிக்கு கரகம் அலங்கரித்து, சுவாமி ஊர்வலம் நடைபெற்றது. அப்போது, பக்தர்களின் தலையில் பூசாரி தேங்காய் உடைத்தார். தொடர்ந்து தீர்த்த பிரசாதம், அன்னதானம் விநியோகிக்கப்பட்டது. இரவு 7 மணிக்கு அம்மன் பூங்கரகம், பல்லக்கு பூந்தேர், பம்பை, தப்பட்டையுடன் ஊர்வலமும், வாணவேடிக்கையும் நடைபெற்றது. விழாவில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

The post கிருஷ்ணகிரி அருகே கோயில் விழாவில் தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நூதன நேர்த்திக்கடன் appeared first on Dinakaran.

Related Stories: