ஒரு கதை சொல்லட்டுமா சார்; சவுக்கு சங்கரிடம் மாட்டியிருக்கும் எடப்பாடி பழனிச்சாமி!

சென்னை: அதிமுக விற்கு நாடாளுமன்ற தேர்தல் வியூக வகுப்பாளராக நியமிக்கப்பட்ட சவுக்கு சங்கரால் அதிமுகவின் தேர்தல் வெற்றிக்கு எந்த பயனும் இல்லை என எடப்பாடி பழனிச்சாமிக்கு கடும் அதிருப்தி உண்டாகி இருக்கிறது. சங்கர் சவகாசத்தை இத்தோடு முடித்துக்கொள்ளலாம்” என மகன் மிதுனிடம் கூறிவிட்டார். ஏனெனில் மிதுன் தான் சங்கரை அழைத்துவந்தது. அப்போது தான் சவுக்கு தன் வேலையை காட்டி உள்ளான். தான் விலகிக்கொள்ள பெரும் தொகை வேண்டும் என சவுக்கு கேட்டுள்ளான். எதற்கு பணம் கொடுக்கணும், கொடுத்த பணத்திற்கே எந்த வேலையையும் செய்ய வில்லையே என மிதுன் மறுத்துள்ளார்.

அப்போது தான் எடப்பாடி பற்றியும், எடப்பாடி சம்மந்தி அதாவது மிதுனின் மாமனார்க்கு எடப்பாடியின் ஆட்சியில் முறைகேடாக ஒதுக்கப்பட்ட கான்டராக்ட் தொடர்பான ஆதார ஆவணங்களையும் மிதுனுக்கு வாட்சப் பண்ணி உள்ளான் சவுக்கு சங்கர். அதை பார்த்த மிதுனுக்கு அதிர்ச்சி, இதெல்லாம் எப்படி சவுக்கு கைக்கு சென்றது என்று குழம்பிபோய் இருந்திருக்கிறார். அதோடு கொடநாடு கொலை தொடர்பான முக்கிய தகவல் ஒன்றிற்கான ஆதாரமும் தன்னிடம் உள்ளதாக சவுக்கு கூறி உள்ளான். இது இப்படி இருக்க எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடியே தன் கைபிடிக்குள் இருக்கிறார் என்ற தைரியத்தில் ஆளும் அரசு பற்றியும், காவல்துறை சார்ந்த பெண் காவலர்கள் பற்றியும் வாய்க்கு வந்தபடி பேசி இப்போது கைதாகி சிறையில் உள்ளான்.

சிறையில் இருக்கும் சவுக்கு எடப்பாடி மகன் மிதுனிடம் தன்னை வெளியே உடனடியாக எடுக்க வேண்டும் இல்லையேல் உங்களுக்கு எதிராக திரும்பி தன் வசம் உள்ள ஆதாரங்களை காவல்துறையிடம் ஒப்படைத்து விடுவேன் என மிரட்ட, இப்போது மிதுன் சவுக்கை எப்படியாவது ஜாமினில் எடுக்க பணம் செலவு செய்து அலைந்து கொண்டுள்ளார். அதிமுகவிடமே காசு வாங்கி கொண்டு அதிமுக கழுத்திற்கே கத்தி வீசிய சவுக்கை ஆதரிக்கவும் முடியாமல் எதிர்க்கவும் முடியாமல் எடப்பாடி பழனிச்சாமி தினறிக்கொண்டுள்ளார்.

 

The post ஒரு கதை சொல்லட்டுமா சார்; சவுக்கு சங்கரிடம் மாட்டியிருக்கும் எடப்பாடி பழனிச்சாமி! appeared first on Dinakaran.

Related Stories: