இந்த நிலையில் குறிப்பிட்ட நாயை தனியார் தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் இன்று அப்புறப்படுத்த வேண்டும் என்ற முனைப்பில் சென்னை மாநகராட்சி நாய்களின் உரிமையாளரை அணுகிய போது 2 நாய்களையும் தங்களுடைய சொந்த பராமரிப்பிலேயே வேறு பகுதிக்கு அப்புறப்படுத்தி கொண்டு செல்ல கூடிய வகையில் அதனை திட்டமிட்டு மதுரைக்கு கொண்டு செய்லபடுவதாக அவர் மாநகராட்சி அதிகாரியிடம் தகவல் தெரிவித்துள்ளார். புதிதாக கொண்டு செல்ல கூடிய பகுதியில் எந்த ஒரு பாதிப்பையும் பொதுமக்களுக்கு ஏற்படுத்தாதவாறு உரிய பாதுகாப்பு வசதிகளையும் அந்த நாய்களுக்கு செய்து பராமரிக்க வேண்டும் என்று அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளது. பூங்காக்களுக்கு வர கூடிய பொதுமக்களுக்கும் அங்கு விளையாட கூடிய சிறுவர்களுக்கும் இத்தகைய கால்நடை வளர்ப்பு பிராணிகளால் எந்த வித பாதிப்பும் ஏற்பட கூடாது என்ற அடிப்படையில் சென்னை மாநகராட்சி சார்பில் அனைத்து பூங்கா கண்காணிப்பாளர்களுக்கும் சுற்றறிக்கை வழங்கப்பட்டுள்ளது.
சுற்றறிக்கையில் கால்நடை பிராணிகளை பூங்காவிற்கு அழைத்து வரக்கூடிய உரிமையாளர்கள் விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்பது குறித்தும். பூங்காவின் கண்காணிப்பு காவலர்கள் எவ்வாறு விதிமுறைகளை உறுதிப்படுத்திட வேண்டும் என்பது போன்ற அறிவுறுத்தல்கலும் வழங்கப்பட்டுள்ளது. பூங்காவிற்கு வரக்கூடிய நபர் ஒரு கால்நடைகளுடன் பூங்காவிற்கு அழைத்து வர வேண்டும். அவ்வாறு அழைத்து வர கூடிய அந்த பிராணிக்கு லைசன்ஸ் பெற்றிருப்பது கட்டாயம் எனவும் வை மூட பட்டிருக்க வேண்டும் எனவும் அதனுடைய கழுத்தில் பாண்ட் மூலம் கட்டப்பட்டு உரிமையாளர் கையிலே பிடித்திருக்க வேண்டும் என்பது போன்ற அறிவுறுத்தல்கள் அதில் வழங்கப்பட்டுள்ளது. இதனை பூங்காவின் காவலர் முறையாக கண்காணித்து சரியாக பயன்படுத்திட வேண்டும் எனவும் தவறும் பட்சத்தில் குறிப்பிட்ட உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
The post சென்னையில் சிறுமியை கடித்த 2 ராட்வெய்லர் நாய்கள் மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டன..!! appeared first on Dinakaran.