ராகுலை பிரதமராக்க பாக். துடிக்கிறது: பிரதமர் மோடி பிரசாரம்

அனந்த்: பாகிஸ்தானில் இம்ரான்கான் அமைச்சரவையில் இடம்பெற்று இருந்த முன்னாள் அமைச்சர் சவுத்ரி பவாத் ஹூசைன், ராகுலின் வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்து அவரை பாராட்டியதாக செய்திகள் வெளியானது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியை பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். குஜராத்தில் அனந்த் நகரில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் பேசிய பிரதமர் மோடி,‘‘காங்கிரஸ் இங்கே இறந்து கொண்டிருப்பதை பார்த்து பாகிஸ்தான் அழுகிறது. பாகிஸ்தான் ஷேசதா(ராகுல்காந்தியை) அடுத்த பிரதமராக்க துடிக்கிறது. இது ஆச்சரியமான விஷயம் இல்லை. பாகிஸ்தான்- காங்கிரஸ் இடையேயான உறவு அம்பலமாகியுள்ளது. நாட்டின் எதிரிகள் இந்தியாவில் பலவீனமான அரசை விரும்புகிறார்கள்” என்றார்.

The post ராகுலை பிரதமராக்க பாக். துடிக்கிறது: பிரதமர் மோடி பிரசாரம் appeared first on Dinakaran.

Related Stories: