பீகாரின் சரண் தொகுதியில் விநோதம் லாலு மகள் ரோகிணிக்கு எதிராக போட்டியிடும் லாலு பிரசாத் யாதவ்

பாட்னா: பீகாரிலுள்ள சரண் மக்களவை தொகுதிக்கு 5ம் கட்டமான மே 20ம் தேதி வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இங்கு ராஷ்ட்ரிய ஜனதா தள வேட்பாளராக அக்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவின் மகள் ரோகிணி ஆச்சார்யா போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ராஜீவ் பிரதாப் ரூடி பாஜ சார்பில் போட்டியிடுகிறார். இந்நிலையில் சரண் மாவட்டத்தை சேர்ந்த உள்ளூர் விவசாயி லாலு பிரசாத் யாதவ் என்பவர் ராஷ்ட்ரிய ஜனசம்பவனா(ஆர்ஜேபி) கட்சி சார்பாக சரண் தொகுதியில் போட்டியிட கடந்த மாதம் 26ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்தார். இதுகுறித்து லாலு பிரசாத் யாதவ் கூறியதாவது, “நான் பல ஆண்டுகளாக சரண் தொகுதியில் இருந்து மக்களவை தேர்தலில போட்டியிடுகிறேன். பீகார் முன்னாள் முதல்வர் ரப்ரி தேவியை எதிர்த்து போட்டியிட்ட நான் இப்போது அவரது மகளை எதிர்த்து போட்டியிடுகிறேன். கடந்த 2017, 2022ம் ஆண்டுகளில் நடந்த குடியரசு தலைவர் தேர்தல்களிலும் போட்டியிட மனு செய்தேன்” என்று தெரிவித்தார்.

The post பீகாரின் சரண் தொகுதியில் விநோதம் லாலு மகள் ரோகிணிக்கு எதிராக போட்டியிடும் லாலு பிரசாத் யாதவ் appeared first on Dinakaran.

Related Stories: