இடைதேர்தல்: வயநாடு மக்களவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தி 1,57,472 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில்

டெல்லி: வயநாடு மக்களவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தி 2,39,554 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். வயநாடு மக்களவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தி தன்னை எதிர்த்து போட்டியிட்ட CPI வேட்பாளரை விட 1,57,472 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். வயநாடு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட நவ்யா ஹரிதாஸ் 45,927 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார்.

அதே போல பீகாரில் 3 சட்டமன்ற தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோரின் ஜன்சுராஜ் கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. பீகாரில் தாராரி தொகுதியில் நடைபெற்ற இடைதேர்தலில் ஜன்சுராஜ் கட்சி வேட்பாளர் இதுவரை 1,041 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார். உத்திரபிரதேசத்தில் நடந்த இடைதேர்தலில் பாஜக 6 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.

கர்நாடகாவில் நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தலில் 3 தொகுதிகளிலும் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது. குஜராத்தில் நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தலில் வாவ் தொகுதியில் பாஜக வேட்பாளரை விட காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது. பஞ்சாப்பில் நடைபெற்ற சட்டமன்ற இடைத் தேர்தலில் 4 தொகுதிகளில் ஆம் ஆத்மி, காங்கிரஸ் தலா 2 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.

The post இடைதேர்தல்: வயநாடு மக்களவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தி 1,57,472 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் appeared first on Dinakaran.

Related Stories: