நாளை மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு: கர்நாடகாவில் 14 தொகுதிகளில் 144 தடை உத்தரவு

பெங்களூரு: மக்களவை தேர்தலில் 102 தொகுதிகளுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த 19-ம் தேதி நடைபெற்றது. இந்நிலையில் கேரளா, கர்நாடகா, அஸ்ஸாம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட 13 மாநிலங்களில் உள்ள 89 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது. இந்நிலையில் தேர்தலையொட்டி 89 தொகுதிகளிலும் பாதுகாப்பு பணிகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக கண்காணித்து வருகிறது. அதன்படி காவலர்கள், துணை ராணுவத்தினர் என ஏராளமானோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் கர்நாடகாவில் நாளை(ஏப்.26) மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள 14 தொகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 28 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள பெங்களூரு தெற்கு, ஹாசன், தட்சிண கன்னடா, மைசூரு, மாண்டியா உள்ளிட்ட 14 தொகுதிகளில் நாளை மாலை வரை 144 தடை அமல்படுத்தப்பட்டுள்ளது. கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் உள்ள 89 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது.

The post நாளை மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு: கர்நாடகாவில் 14 தொகுதிகளில் 144 தடை உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: