ஐபிஎல் தொடர் சட்டவிரோதமாக ஒளிபரப்பப்பட்ட புகாரில் நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன்

மும்பை: ஃபேர்பிளே செயலி மூலம் ஐபிஎல் தொடர் சட்டவிரோதமாக ஒளிபரப்பப்பட்ட புகாரில் நடிகை தமன்னாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஃபேர்பிளே செயலியின் விளம்பர தூதுவரான நடிகை தமன்னா ஆஜராக மகாராஷ்டிரா சைபர் கிரைம் சம்மன் அனுப்பியுள்ளது. 2023ம் ஆண்டில் ஐபிஎல் போட்டிகளை ஃபேர்பிளே என்ற செயலியில் சட்டவிரோதமாக ஒளிபரப்பப்பட்ட விவகாரத்தில், நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் அனுப்பியுள்ளது.

அதில், நடிகை தமன்னா நேரில் விசாரணைக்கு ஆஜராகும்படி மும்பை சைபர் கிரைம் சம்மன் அனுப்பியுள்ளது.ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்ப viacom நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால், தமன்னா ஃபேர்பிளே என்ற செயலியில் சட்டவிரோதமாக ஒளிபரப்பியதால் கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டதாக viacom சார்பில் புகார் எழுப்பப்பட்டது. அதன்படி, ஏப்ரல் 29ம் தேதி அன்று தமன்னா நேரில் ஆஜராகும்படி மும்பை சைபர் கிரைம் சம்மன் அனுப்பியுள்ளது.

The post ஐபிஎல் தொடர் சட்டவிரோதமாக ஒளிபரப்பப்பட்ட புகாரில் நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் appeared first on Dinakaran.

Related Stories: