தமிழ்நாட்டில் அதிகரிக்கும் வெயில்!: வெப்பத்தின் பாதிப்பில் இருந்து தற்காத்துக்கொள்வது எப்படி?..செய்ய வேண்டியவை.. செய்யக் கூடாதவை என்னென்ன?

சென்னை: தமிழ்நாட்டில் வெப்ப அலையால் பல இடங்களில் வெப்பம் அதிகரித்துள்ள நிலையில், இதிலிருந்து தப்பிக்க என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.

தமிழ்நாட்டில் கோடைகாலத்தில் வழக்கமாகவே வெயில் வாட்டி வதைக்கும். ஆனால் இந்த ஆண்டு வெயில் அதிகரித்துள்ளதால் ஈரோடு, மதுரை உள்ளிட்ட இடங்களில் வெப்ப அலையும் வீசுகிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வெயிலின் காரணமாக மக்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதால் முன்னெச்சரிக்கையுடன் இருக்கும்படி மருத்துவர்கள் மற்றும் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் அறிவுறுத்துகின்றனர்.

செய்ய வேண்டியவை:

* வெப்பத்தை தனித்துக்கொள்ள தாகம் எடுக்கவில்லை என்றாலும், அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும்.

* வெளியில் செல்லும்போது தண்ணீரை எடுத்துச் செல்ல வேண்டும்.

* மோர், எலுமிச்சை, தண்ணீர் போன்றவற்றையே பருக வேண்டும்.

* நண்பகலில் அதிக உடல் உழைப்பு தேவைப்படும் வேலைகளை நண்பகலில் செய்வதைத் தவிர்க்கலாம்.

* உடல் சோர்வுற்றாலோ, காய்ச்சல் ஏற்பட்டாலோ தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

* வளர்ப்புப் பிராணிகளை நிழலில் கட்டி வைத்து, அதிக தண்ணீர் தர வேண்டும்.

* வீட்டைக் குளிர்ச்சியாக வைத்துக் கொண்டால் வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தப்பிக்கலாம்.

செய்யக் கூடாதவை:

* வெப்பத்தால் மயக்கம் ஏற்படும் ஆபத்து இருப்பதால் வெப்ப அலை தாக்கத்தின் போது நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

* குளிர்பானங்கள், தேநீர், காபி, மது குடிப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

* வெளியில் வேலை பார்ப்பவர், குடையோ, தொப்பியோ இல்லாமல் செல்லக் கூடாது.

* வெப்ப அலை தாக்கத்தின் போது புரதச் சத்து அதிகம் உள்ள உணவைத் தவிர்க்க வேண்டும்.

The post தமிழ்நாட்டில் அதிகரிக்கும் வெயில்!: வெப்பத்தின் பாதிப்பில் இருந்து தற்காத்துக்கொள்வது எப்படி?..செய்ய வேண்டியவை.. செய்யக் கூடாதவை என்னென்ன? appeared first on Dinakaran.

Related Stories: