மின்னணு வாக்கு இயந்திரத்தில் உள்ள மைக்ரோ கண்ட்ரோலரில் எந்த மாற்றமும் செய்ய முடியாது: உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் விளக்கம்

டெல்லி : மின்னணு வாக்கு இயந்திரத்தில் உள்ள மைக்ரோ கண்ட்ரோலரில் எந்த மாற்றமும் செய்ய முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. ஒப்புகைச்சீட்டுகளையும் எண்ண உத்தரவிடக் கோரிய வழக்கில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆஜராகி விளக்கம் அளித்தனர். மைக்ரோ கண்ட்ரோலர் என்பது ஒருமுறை மட்டுமே புரோகிராம் செய்யக் கூடியது என்றும் EVM, VVPAT, கண்ட்ரோல் யூனிட் ஆகிய மூன்றிலும் தனித் தனி மைக்ரோ கண்ட்ரோலர் பொருத்தப்பட்டிருக்கும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து 100% ஒப்புகைச் சீட்டுகளை பதிவான வாக்குகளுடன் ஒப்பிட்டு பார்க்கக் கோரிய வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

The post மின்னணு வாக்கு இயந்திரத்தில் உள்ள மைக்ரோ கண்ட்ரோலரில் எந்த மாற்றமும் செய்ய முடியாது: உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் விளக்கம் appeared first on Dinakaran.

Related Stories: