காவலர் தேர்வுக்கான விடை குறிப்பு போலியாக தயாரித்து விற்பனை சென்னையில் பணியாற்றிய ஒன்றிய அரசு அதிகாரி கைது: உ.பி. போலீஸ் நடவடிக்கை

சென்னை: உ.பி.யில் கடந்த பிப்ரவரி 17ம் தேதி காவலர் தேர்வு நடந்தது. இந்த தேர்வுக்கான விடை குறிப்புகள் (கீ ஆன்சர்) போலியாக தயாரித்து விற்பனை செய்யப்பட்டது. இதுகுறித்து காந்த்ராபூர் போலீசார் 7 சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். அதில் காவலர் தேர்வுக்கான போலி விடைகள் தயாரித்து விற்றது பி.எஸ்.பர்தா மாவட்டத்தை சேர்ந்த விஜய் கண்ணுஜியா(30) என உறுதி செய்யப்பட்டது. அவரை உ.பி. போலீசார் தேடி வந்த நிலையில், சென்னை சூளைமேட்டில் நண்பர்களுடன் தங்கி 8 மாதங்களாக ஆயிரம் விளக்கு பகுதியில் இந்திய உணவு கழகத்தில் உதவி மேலாளராக பணியாற்றியது தெரிய வந்தது. உ.பி.தனிப்படை போலீசார் சென்னை போலீசார் உதவியுடன் நேற்று முன்தினம் விஜய் கண்ணுஜியாவை கைது செய்தனர். எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உ.பி.க்கு அழைத்து சென்றனர்.

The post காவலர் தேர்வுக்கான விடை குறிப்பு போலியாக தயாரித்து விற்பனை சென்னையில் பணியாற்றிய ஒன்றிய அரசு அதிகாரி கைது: உ.பி. போலீஸ் நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: