‘கொலீஜியத்தால் சுதந்திரமான நீதிபதிகள் அங்கீகரிக்கப்படுவதில்லை: உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ரோஹிந்தன் நாரிமன் வேதனை

சென்னை: கொலிஜியம் முறை அழுத்தங்களுக்கு அடிபணிந்து விட்டதால் நேர்மையான நீதிபதிகளை தேர்ந்தெடுக்க முடியாத நிலை இருப்பதாக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ரொஹிந்த நாரிமன் குற்றம்சாட்டியுள்ளார். தமிழ்நாடு அரசின் முன்னாள் தலைமை வழக்கறிஞர் கோவிந்த சாமிநாதன் பெயரிலான விருது வழங்கும் விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட நாரிமன் ராஜஸ்தான் மற்றும் திரிபுரா உயர்நீதிமன்றங்களின் முன்னாள் தலைமை நீதிபதி அகில் குரேஷிக்கு விருதை வழங்கினார்.

அப்போது பேசிய முன்னாள் நீதிபதி ரொஹிந்தனாரிபன் நீதிபதி அகில் குரேஷியை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் தவறிவித்ததாக கூறினார் . திறமையான மற்றும் நேர்மையான நீதிபதிகள் கொலிஜியம் அமைப்பால் சமீப காலமாக அங்கீகரிக்கப்படுவதில்லை என்று விமர்சித்த அவர் அதனால் தான் அகில் குரேஷி போன்ற துணிச்சலான நீதிபதிகளை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக மணியமிக்க முடியவில்லை என குற்றம்சாட்டினார்.

உயர்நீதிமன்றங்களுக்கும், உச்சநீதிமன்றங்களுக்கும் நீதிபதியை நியமிக்கும் கொலிஜிய முறை சிறந்த முறையாக இருந்தாலும் அந்த முறை சிறப்பாக செயல்படவில்லை என்றும் ரொஹிந்தனாரிபன் கூறினார். இந்தியாவின் நீதித்துறையின் சுதந்திரம் 2 முறை தாக்குதலுக்கு ஆளானதாக சுட்டிக்காட்டிய நீதிபதி நாரிமன் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அவசர நிலையத்தின் அறிவித்த போது முதல் தாக்குதலுக்கு ஆளானதாகவும் கடந்த அக்டோபர் 2023ல் ஒன்றிய அரசு 16 நீதிபதிகளை இடமாற்றம் செய்தபோது இரண்டாவது முறையாக தாக்குதலுக்கு ஆளானதாகவும் குறிப்பிட்டார்.

தற்போதைய கொலிஜிய முறை சில அழுத்தங்களுக்கு அடிபணிந்துள்ளதால் இது போன்ற விதி மீறல் ஏற்பட்டதாக அவர் கூறினார். விழாவில் பேசிய நீதிபதி அகில் குரேஷி இந்தியாவில் வேற்றுமையில் ஒற்றுமை என்பது முக்கியம் என்றும் இந்த எண்ணத்தை ஒரு போதும் சிதைக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார். கடந்த 2010ம் ஆண்டு குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதியாக அகில் குரேஷி இருந்த போது சொராபுதீன் போலி என்கவுண்டர் வழக்கில் அப்போதைய குஜராத் உள்துறை அமைச்சர் மித்ஹாவை சிபிஐ காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவிட்டதும் லோக் ஆயுத்தா நியமன வழக்கில் மோடி தலைமையிலான குஜராத் அரசுக்கு எதிராக தீர்பளித்ததும் அதனாலேயே பின்னர் அவரை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க ஒன்றிய அரசு மறுப்பு விட்டதாகவும் குற்றசாட்டுகள் எழுந்தது குறிபிடத்தக்கது.

The post ‘கொலீஜியத்தால் சுதந்திரமான நீதிபதிகள் அங்கீகரிக்கப்படுவதில்லை: உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ரோஹிந்தன் நாரிமன் வேதனை appeared first on Dinakaran.

Related Stories: